மூத்த நடிகை ஜெமினி ராஜேஸ்வரி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 94. ராஜேஸ்வரியின் மரண செய்தி அறிந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
நடனம் மீதான ஆசையால் பள்ளியில் படித்தபோதே படங்களில் ஆட காரைக்குடியில் இருந்து சென்னைக்கு வந்தவர் ஜெமினி ராஜேஸ்வரி. சந்திரலேகா படம் மூலம் தமிழ் திரையுலகில் குரூப் டான்ஸராக அறிமுகமானவர். 400க்கும் மேற்பட்ட படங்களில் டான்ஸ் ஆடியிருக்கிறார்.
மேலும் மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார். காதல் படுத்தும் பாடு மூலம் நடிகை அவதாரம் எடுத்தார். கமல் ஹாசனின் 16 வயதினிலே, பாக்யராஜ் நடித்த சின்ன வீடு, மண் வாசனை, சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், கயல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
சென்னை கோட்டூர்புரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த ராஜேஸ்வரிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 94. ஜெமினி ராஜேஸ்வரிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.
ராஜேஸ்வரியின் மறைவு குறித்து அறிந்த திரையுலகினரும், சினிமா ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.