ரம்பிள் சமூக தளம் மூலம் தனது பேரணியை ஸ்ட்ரீம் செய்யும் முயற்சியில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார்
ரம்பிள் சமூக தளம் மூலம் தனது பேரணியை ஸ்ட்ரீம் செய்யும் முயற்சியில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் தனிப்பட்ட அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடக்கியுள்ளன. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இருந்த காலத்தில், கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துத் தெரிவித்ததாகக் கூறி, அவரது தனிப்பட்ட சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி நடத்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். புளோரிடா, ஓஹியோ உள்ளிட்ட மாகாணங்களில் தனது ஆதரவாளர்களுடன் ஜோ பைடன் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி நடத்த அவர் திட்டமிட்டு வருகிறார்.
ஓஹியோ பேரணியை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய, தற்காலிகமாக, ரம்பிள் என்ற சமூக தளத்தில் டொனால்டு ட்ரம்ப் இணைந்துள்ளார். இதை ரம்பிள் தளத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஸ் பாவ்லோவ்ஸ்கி உறுதிப்படுத்தி உள்ளார்.