ஒரே வீட்டில் 2மனைவியுடன் குடித்தனம்; மூன்றாவது மனைவிக்கும் பிளான் பண்ணியவரின் ஆணுறுப்பை அறுத்துக் கொன்ற மனைவி!:

Date:

2 பெண்ணை திருமணம் செய்த மதகுரு, 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுவந்த நிலையில் கணவரின் பிறப்பு உறுப்பை கத்தியால் சிதைத்து இரண்டாவது மனைவி துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் அருகே உள்ள ஷிகர்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மவுல்வி வகில் அஹ்மத். 57 வயதாகும் இவர் ஒரு மதகுரு. இவர் ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மவுல்வி வகில் அஹ்மத், 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக இரண்டு மனைவிகளிடம் தெரிவித்த போது மனைவிகள் இருவருக்கும், மதகுருவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

2 மனைவியின் அரவணைப்பு போதாது என நினைத்த மதகுரு 3வது திருமணம் செய்து கொள்வதில் மிகவும் உறுதியாக இருந்திருக்கிறார்.

மதகுருவின் இந்த முடிவு, அவருடைய இரண்டாவது மனைவியான ஹஸ்ராவிற்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து வாக்குவாதத்தில் ஏற்படவே ஹஸ்ராவை அவர் கடுமையாக அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அன்றிரவு மதகுருவான மவுல்வி வகில் அஹ்மத், தூங்கிய பிறகு, கோபத்தில் இருந்த அவருடைய இரண்டாவது மனைவி ஹஸ்ரா, கத்தி ஒன்றை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த அவருடைய கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கி துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல்நிலையத்துக்கு புகார் அளித்துள்ளனர். அதன்பின்னர் விரைந்து வந்த போலீசார் மதகுரு கொலை செய்யப்பட்டதை அறிந்தனர், பின்னர் மதகுருவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலையை செய்த ஹஸ்ராவையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்