ஐ.சி.சி போட்டி நடுவர் பில் விட்டிகேஸ் கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளார் என்பதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து- இலங்கைக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ரி20 தொடரின் போது அதிகாரப்பூர்வமாக பணியாற்றிய விட்டிகேஸ், அறிகுறியை வெளிப்படுத்தவில்லை.
இங்கிலாந்து அரசாங்கத்தின் நெறிமுறையின்படி, ஜூன் 25 முதல் 10 நாட்கள் சுய-தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஐந்து அதிகாரிகள் உட்பட, போட்டி அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அணிகளைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் நெருங்கிய தொடர்புகளாகக் கருதப்பட்டனர். அவர்கள் ஜூலை 7 வரை 10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இரு அணி வீரர்களும் தொற்றிற்குள்ளாகவில்லை.
திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை முதலாவது ஒருநாள் போட்டியை நடத்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




