பிரித்தானியாவில் 11 வயது சிறுமி ஒருவர் பிள்ளை பெற்றெடுத்துள்ள நிலையில் பிரித்தானியாவின் மிக இளவயது தாயார் இவர் என்று நம்பப்படுகிறது.
தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததும் பிள்ளை பெற்றெடுத்துள்ளதும் தங்களுக்கு கடும் அதிர்ச்சியான தகவல் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமது பத்தாவது வயதில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். 30 வாரங்களுக்கு பிறகு தமது 11ம் வயதில் பிள்ளை பெற்றெடுத்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மிக இளவயது என்பதால் சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கின்றனர்.
தமது மகள் கரப்பமாக இருந்ததை குடும்பத்தினர் ஆரம்பத்தில் அறிந்திருக்கவில்லை. மட்டுமின்றி, கர்ப்பமாக இருப்பதை மக்கள் உணராததன் மர்மம் தங்களுக்கு புரியவில்லை என மருத்துவர்கள் தரப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் 2006ல் 12 வயதான ட்ரெஸா மிடில்டன் பிள்ளை பெற்றெடுத்ததே பிரித்தானியாவில் மிக இளவயது பிரவசமாகும். விசாரணையில் அந்த குழந்தையின் அப்பா, ட்ரெஸாவின் சகோதரன் என்பது தெரிய வந்தது.
உலகின் மிக இளைய அம்மா லினா மிடியா என்ற பெருவை சேர்ந்த சிறுமியாவார். அவர் 1939 மே மாதம் ஜெரார்டோ என்ற பையனைப் பெற்றெடுத்தபோது ஐந்து வயது மற்றும் ஏழு மாதங்கள் மட்டுமே வயதுடையவராக இருந்தார்.
அவளுக்கு ஒரு கட்டி இருப்பதாக அவரது பெற்றோர் நினைத்தார்கள், ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது கண்டறியப்பட்டது.
2,500 பேர்களில் ஒருவருக்கு தாம் கர்ப்பிணியாக இருப்பது தெரியாது அல்லது மறைத்துவிடுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.