தொழிலுக்காக வெளிநாடு செல்லும் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி பெற வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி இருந்ததை தொடர்ந்து கொவிட் தடுப்பு தேசியக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழிலுக்குத் தேவையான தொழில் ஒப்பந்தம், வீசா மற்றும் தொழில் தொடர்பான நியமனக் கடிதத்தைப் பெற்றவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசி திட்டத்திற்கு தகுதி பெறுகின்றனர்.
அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்பு முகவர் நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்லவுள்ள நபர்கள் குறித்த முகவர் நிலையத்தின் ஊடாகவும், சுயமாக வெளிநாடு செல்லவுள்ளவர்கள் பணியகத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு பதிவு செய்துக் கொள்ள முடியும்.
தடுப்பூசி வேலைத்திட்டம் எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மேலதிக தகவல்களை 1989 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.