நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டாக்டர்’. நெல்சன் இயக்கும் இப்படத்தை எஸ்.கே.பிரொக்ஷன் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, இளவரசு, விஜே அர்ச்சனா, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை கடந்த மார்ச் 26-ம் திகதியே வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இதையடுத்து ரம்ஜான் தினத்தன்று ‘டாக்டர்’ வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதற்குள் கொரானா 2வது அலையின் தாக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டடது.
திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று நிச்சயமான தெரியாத நிலையில் ஓடிடியில் ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் கொரானா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் திரையரங்குகளுக்கு அனுமதிக்கப்படும் என தெரிகிறது. இதை மனதில் வைத்து வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி ‘டாக்டர்’ படத்தை நேரடியாக திரையரங்கில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.