மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது.
18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் நிலையில், தடுப்பூசி தொடர்பாகவும் டெல்டா பிளஸ் கொரோனா பரவல் உள்பட பல்வேறு விஷயங்கள் பிரதமர் மோடியின் உரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1