பெண் உயிரிழந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதிர்ச்சியடைந்தார். வந்தனாவின் குடும்பத்துக்கு, தன் ஆழ்ந்த இரங்கலை நேரில் சென்று தெரிவிக்கும்படி பொலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உத்தர பிரதேச மாவட்டத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். கான்பூருக்கு குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்த ஜனாதிபதி, அங்கிருந்து காரில் கிராமத்துக்கு சென்றார். அவரது கார் செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வந்தனா மிஸ்ரா (வயது 50) என்ற பெண் உயிரிழந்தார். சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்கலாம்’ என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதிர்ச்சியடைந்தார். வந்தனாவின் குடும்பத்துக்கு, தன் ஆழ்ந்த இரங்கலை நேரில் சென்று தெரிவிக்கும்படி பொலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே நடந்த சம்பவத்துக்கு, கான்பூர் பொலீசார் மன்னிப்பு கோரியுள்ளனர்.