அமெரிக்காவில் சாதனை படைத்த தமிழ் பாடல்; ரசிகர்கள் வாழ்த்து!

Date:

தமிழ் ஆல்பம் பாடல் ஒன்று அமெரிக்காவில் சாதனை படைத்துள்ளதால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நம் பூர்வக்குடிகளின் வாழ்வியலை மையமாக வைத்தும் உருவாக்கப்பட்ட பாடல் ‘என்ஜாய் என்சாமி’. பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில மாதங்களுக்கு யூ-ட்யூபில் வெளியான இந்த இண்டிபென்டென்ட் ஆல்பம் உலக அளவில் புகழ்பெற்றது. இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த பாடல் ராப் மற்றும் நாட்டுப்புற இசை என இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த பாடல் யூ- ட்யூபில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.

இதையடுத்து என்ஜாய் என்ஜாமி பாடலை ரீமிக்ஸ் பாடலாக பிரபல பிரெஞ்ச் ராப் இசைக் கலைஞர் டிஜே சினேக் உருவாக்கியுள்ளார். டிஜே ஸ்நேக் மற்றும் பாடகி தீ ஆகிய இருவரும் இணைந்து இந்த பாடலை ரீமிக்ஸில் உருவாக்கி கலக்கியுள்ளனர்.

இந்நிலையில் என்ஜாய் எஞ்சாமி ரீமேக்ஸ் பாடலின் விளம்பரம் அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் தீ மற்றும் சினேக் ஆகியோரின் புகைப்படத்துடன் வெளியுள்ளது. தமிழ் ஆல்பம் பாடல் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது புதிய சாதனையாக கருதப்படுகிறது. சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள இந்த பாடல் குழுவினருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்