26.3 C
Jaffna
February 2, 2025
Pagetamil
சினிமா

இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!

அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கார்த்திக் சுப்புராஜ் சார்பில் அவரது நண்பர்கள் வழங்கினர்.

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற அவர், ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனரானார். தற்போது விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள சுமார் 800 இலங்கை தமிழர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கொடுத்து உதவி உள்ளார். அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கார்த்திக் சுப்புராஜ் சார்பில் அவரது நண்பர்கள் வழங்கினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment