வடக்கின் இன்றைய பரிசோதனை முடிவுகள்!

Date:

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று இரவு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வடக்கில் மேலும் 9 பேர் தொற்றுடன் அடையாளம் காண்பட்டனர்.

இன்று இரவு 265 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில், வசாவிளான் தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவர், யாழ்ப்பாணம் சிறைச்சாலை ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலை 5 பேர், தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி, வடக்கில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இன்று 51 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்மாவட்டத்தில் 38 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேரும், தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பை சேர்ந்த 11 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.


முன்னைய செய்தி-யாழில் 32 பேர்… நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தொற்று: வடக்கின் இன்றைய பரிசோதனை முடிவுகள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 42 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் 10 பேர் தனிமைப்படுத்தல் மையங்கள், பாதுகாப்ப தரப்பை சேர்ந்தவர்கள்.

இன்று 659 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில் 42 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேரும்,  பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒருவரும், தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒருவரும் என 31 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொண்ட நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தொற்று உறுதியானது. தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவர் நேற்று பிசிஆர் சோதனை மேற்கொண்டார். தொற்று உறுதியாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் 2 பேரும், பரந்தன் தனிமைப்படுத்தல் மையத்தில் 3 பேரும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையங்களில் 4 பேர், காங்கேசன்துறை கடற்படை தளத்தில் ஒருவரும் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்