பேஸ்புக்கில் அவமானப்படுத்தினார்களாம்: இருவரை சிலுவையில் அறைந்து சித்திரவதை!

Date:

முகப்புத்தகம் ஊடாக நபர் ஒருவரை அவமானப்படுத்திய இருவரை கடத்திச் சென்று கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்த சந்தேகநபர், அவர்களை அம்பிட்டிய பகுதிக்கு அழைத்துச் சென்று சிலுவைப்போன்ற பலகைகளில் இருவரையும் வைத்து ஆணி அடித்து சித்திரவதை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 25 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அம்பிட்டிய பிரதேசத்தில் ஆலயம் ஒன்றை நடத்திச் செல்லும் 30 வயதுடைய துஷ்மந்த என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரும் நண்பர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த 44 மற்றும் 38 வயதான இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களை தேடி பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்