26.8 C
Jaffna
December 15, 2024
Pagetamil
மருத்துவம்

கொழுப்பைக் குறைக்கும் வேப்பிலை சாறு!

வேப்பிலை என்று சொன்னாலே நம் நாவில் தோன்றும் சுவை கசப்பு தான். கசப்பாக இருப்பதாலேயே பலருக்கும் இது பிடிக்காது. ஆனால் இயற்கையாகவே இதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வேப்பிலையை நாம் எடுத்துக்கொள்ளும்போது நாம் ஆரோக்கியமாகவும் உடல் வலுவுடன் இருக்கலாம்.

வேப்பிலை போன்ற மூலிகைகள் உடலுக்கு நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியைத் தருகின்றன. மூலிகைகளில் குறிப்பாக வேப்பிலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் உடல் எடையை குறைக்க உடல் ஆரோக்கியமாக இருக்க என பல நலன்களுக்கு இது பெயர் பெற்றது. இந்த வேப்பிலை உடல் எடையை குறைக்க எப்படி உதவும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வேப்பிலையில் விட்டமின் C, கால்சியம், பாஸ்பரஸ், கார்ப்ஸ் மற்றும் புரதங்கள் போன்ற கூறுகள் நிறைந்து காணப்படுகிறது. இவை அனைத்தும் நம் உடலின் அன்றாட தேவைகளை பூர்த்திச் செய்யக்கூடியது.

இந்த வேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகம். அதே போல செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளையும் குணப்படுத்தும் திறன் கொண்டது. வேப்பிலை சாறு மற்றும் தேன் இரண்டையும் கலந்து எடுத்துக்கொண்டால் எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். வேப்பிலையின் கசப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஆரோக்கியமான கட்டுக்கோப்பான உடல் அமைப்பு வேண்டுமென்றால் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது.

எடை அதிகரிக்க முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற மற்றும் அதிக உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது தான். இதனால் பசி உணர்வு முழுமையடையாமல் இருக்கும். எனவே இது போன்ற நேரத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்த வேப்பிலை சார்ஜ் ஓர் கப் குடித்தால் தேவையற்ற உணவுகளின் தேவையின்றி இருக்கலாம்.

வேப்பிலையில் அதிக நார்ச்சத்து உள்ளது என்பதால் உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்த அதிக நேரம் உங்களை முழுமையாக உணர வைக்கும். எனவே கட்டுக்கோப்பான உடலமைப்பு வேண்டுமென்றால் வேப்பிலையும் அவசியம்.

வயிறு சுத்தம்

எடை அதிகரிப்பதற்கான இன்னொரு முக்கிய காரணம், காலையிலும் மாலையிலும் நாம் எடுக்கும் தின்பண்டங்களும் தான். இந்த சமயத்தில் வேப்பிலை சாறு எடுத்துக்கொள்வதன் மூலம் சிற்றுண்டி முழுமையாக தவிர்க்கலாம்.

அது மட்டுமில்லாமல் வேப்பிலை சாறு குடிப்பதால் தேவையற்ற வயிற்று இருக்கும் அசுத்தங்கள் நீங்கி நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். வேப்ப இலை சாறு உடலின் உட்புற அமைப்பை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். இது நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் ஆகியவற்றை நீக்குகிறது. இது வயிறு வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கிறது.

உடலில் இருந்து ஒவ்வாமை பொருட்களையும் வேப்பிலை நீக்கும். இதனால் இது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறலாம்.

கொழுப்பு சேருவதைத் தடுக்கும்

வேப்ப இலை சாறு ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உடலுக்கு உதவியாக இருக்கும். அதே சமயம் உடலில் கொழுப்பு உறிஞ்சப்படுவதை தடுக்கவும் செய்கிறது. இதனால் உடல் அதிக கொழுப்பை சேர்க்காது. கூடுதலாக வேப்ப இலை சாறு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் சாதகமான விளைவைக் கொண்டுள்ளதால் எடை இழப்பு நன்றாக நிகழும். வேப்பிலை சாற்றை தினமும் உட்கொள்வது உடலின் கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.

கொழுப்பை எரிக்க உதவுகிறது

வேப்பிலை சாறு உட்கொள்வதால் வளர்சிதை மாற்றம் நடக்கும் வீதம் அதிகரிக்கும். இது கொழுப்பை அதிகரிக்கும் என்சைம்களின் வளர்ச்சியை நிறுத்துகிறது. அதோடு, வஉடலில் உள்ள கொழுப்பு எரிக்கும் ஹார்மோன்களின் செயல்பாடுகளையும் துரிதப்படுத்தும். இதன் காரணமாக கொழுப்பு உடலில் இருந்து வேகமாக வெளியேறும்.

எனவே கொழுப்பு உடலில் சேராமலும் உடலில் சேர்ந்தாலும் அதை எரிக்க வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்பதால உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள எண்ணுபவர்கள் கண்டிப்பாக வேப்பிலைச் சாறு தினமும் குடிக்கலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment