நெல்லூர் அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா பட்டினம் கடற்கரை பகுதியில் இன்று காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த படகு ஒன்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனைப் பார்த்த அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த படகில் இருந்தவர்கள் கடலோரா காவல் படையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த கடலோர காவல் படையினர் விரைந்து வந்தனர்.
இதையடுத்து தீயை அணைத்து படகில் இருந்த சென்னையை சேர்ந்த 9 மீனவர்களை மீட்டனர். மேலும் படகு தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1