26.5 C
Jaffna
January 9, 2025
Pagetamil
உலகம்

அப்பாவின் செல்போனில் ரூ15 ஆயிரத்திற்கு நூடுல்ஸ் ஓர்டர் செய்த குழந்தை!

வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் மீது சற்று அதிகமான கவனம் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். அவர்கள் செய்யும் சிறு குறுப்புகள் பல நேரங்களில் ரசிக்கும்படி இருந்தாலும் சில நேரங்களில் நமக்கே ஆப்பு வைத்தது போல ஆகிவிடும். தற்போது தொழிற்நுட்ப வளர்ச்சி காரணமாக குழந்தைகள் எல்லோரும் செல்போனை பயன்படுத்த துவங்கிவிட்டனர். அந்த செல்போனிற்குள் அவர்களை பாதுகாப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.

இந்நிலையில் சீனாவில் தன் தந்தையுடன் இருந்த சிறுமி ஒருவர் தன் தந்தையின் செல்போனை எடுத்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய தன் தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு தந்தையும் தன் செல்போனை கொடுத்து தன் மகள் சிறு வயதிலேயே ஆன்லைன் ஆர்டர் செய்கிறாளே என ஆசையில் கொடுத்து ஆர்டர் செய்ய சொல்லிவிட்டார்.

அந்த மகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் அதை ஆர்டர் செய்துள்ளார். அதுவரை எல்லாம் நன்றாத்தான் சென்று கொண்டிருந்தது. நூடுல்ஸ் ஆர்டர் வந்து போது தான் அவர்களுக்கு பிரச்சனையே காத்திருந்தது. ஆர்டர் கொண்டு வந்தவர் நூடுல்ஸை ஒரு பெரிய வேனில் எடுத்து வந்தார். அவர்களிடம் நூடுல்ஸ் வந்திருக்கிறது என சொல்லி பில்லை கொடுத்துள்ளார். தந்தை அந்த பில்லை பார்த்தும் ஷாக் ஆகிவிட்டார்.

மொத்தம் ரூ15 ஆயிரத்திற்கு நூடுல்ஸை அந்த சிறுமி ஆர்டர் செய்துள்ளார். அதாவது 1 நூடுல்ஸ் ஆர்டர் செய்வதற்கு பதிலாக 100 நூடுல்ஸ் ஆர்டர் செய்துவிட்டார். அதிகமாக ஆர்டர் வந்துள்ளது என அதை கிராஸ் செக் செய்யாமல் அந்நிறுவனமும் நூறு நூடுல்ஸை தயார் செய்து அனுப்பிவிட்டது. இப்பொழுது அதைவாங்குவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை.

இதையடுத்து தந்தை அந்த நூடுல்ஸ் அத்தனையையும் வாங்கி தன் வீட்டிற்கு 8 நூடுல்ஸை வைத்துவிட்டு மற்ற நூடுல்ஸ்களை அக்கம் பக்கத்தில் உள்ள ஏழை மக்களுக்கு தானமாக வழங்கிவிட்டார். டெலிவரி நிறுவனத்திற்கும் தன் வங்கி கணக்கிலிருந்த ரூ15 ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார்.

இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜெட் ப்ளூ விமானத்தில் அதிர்ச்சி – இரு சடலங்கள் மீட்பு

east tamil

உலக அரசியலில் எலான் மஸ்க்கின் சர்ச்சை

east tamil

சீனாவில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம்

east tamil

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

east tamil

கிறிஸ்மஸ் கேக்கில் நஞ்சு கலந்து 3 குடும்ப உறுப்பினர்களை கொன்ற மருமகள் கைது!

Pagetamil

Leave a Comment