யுவன் – தெருக்குரல் அறிவு கூட்டணியில் உருவாகியுள்ள ‘Dont Touch Me’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடிய பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’. கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூ-ட்யூபில் வெளியான இந்த இண்டிபென்டென்ட் ஆல்பம் பாடல் உலக அளவில் புகழ்பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமையில் உருவான இப்பாடல் ராப் மற்றும் நாட்டுப்புற இசை என இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.அழிந்து வரும் காடுகளையும், அதில் வாழும் உயிரினங்களையும் பற்றி பேசும் பாடலாக இப்பாடல் உருவானது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்ற இப்பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து பேசும் விழிப்புணர்வு பாடல் ஒன்று உருவாகியுள்ளது. இந்த பாடலை தெருக்குரல் அறிவு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். ‘Dont Touch Me’ என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை யுவன், தனது யு1 ரெக்கார்ட்ஸ் மூலமாகத் தயாரித்துள்ளார். இந்த பாடல் இன்று வெளியாகியுள்ளதை யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.