26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இந்தியா உலகம்

அருணாசல பிரதேசம் அருகே புல்லட் ரயில் போக்குவரத்தை தொடங்கிய சீனா!

அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள திபெத் மாகாணத்தில் முதன் முதலாக புல்லட் ரயிலை சீனா நேற்று இயக்கியது.

சீனாவை ஒட்டி அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என அந்நாடு உரிமைக் கொண்டாடி வருகிறது. மேலும், அருணாச்சல பிரதேசத்துக்குள் தங்கள் ராணுவ வீரர்களை அனுப்புவது போன்ற செயல்களிலும் சீனா பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது. ஆனால், இந்தியாவின் கடும் எதிர்ப்பு காரணமாக, தற்போது இந்த விவகாரத்தில் இருந்து சீனா சற்று ஒதுங்கியே உள்ளது.

எனினும், அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு அருகே அமைந்துள்ள சீனப் பகுதிகளில் பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களை அந்நாடு மேற் கொண்டு வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையானது, அருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமிக்க எடுக்கப்படும் முயற்சிகளாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அருணாச்சல பிரதேசத் தில் இந்தியாவும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

bullet-train-to-tibet

இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள தன் னாட்சி மாகாணமான திபெத்தில் புல்லட் ரயில் திட்டத்தை சீனா அறிமுகப்படுத்தி உள்ளது.

திபெத் தலைநகர் லாசா வையும், அதே மாகாணத்தில் உள்ள நியிங்ச்சி பகுதியையும் இணைக்கும் புல்லட் ரயிலை சீனா நேற்று இயக்கியது. திபெத் மாகாணத்தில் சீனா சார்பில் இயக்கப்படும் முதல் புல்லட் ரயில் இது என்பது குறிப்பிடத் தக்கது.

லாசாவுக்கும், நியிங்ச்சி பகுதிக்கும் இடையேயான 435.5 கி.மீ. தொலைவினை சுமார் ஒன்றரை மணி நேரத்தில் இந்த புல்லட் ரயில் கடந்துவிடும் என சீன அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவச் சட்டம் அமல் எதிரொலி: தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment