27 C
Jaffna
January 24, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

வெற்றிலையை பயன்படுத்தி முக அழகை பெறலாம்!

முகத்தில் உள்ள சில தழும்புகள் ஆங்காங்கே திட்டுதிட்டாக படிந்த கருமை நிறம் மற்றும் பொலிவற்ற தோற்றத்தினால் அதிகளவில் பெண்கள் பாதிப்படுகிறார்கள்.

முகத்தில் உள்ள சில தழும்புகள் ஆங்காங்கே திட்டுதிட்டாக படிந்த கருமை நிறம் மற்றும் பொலிவற்ற தோற்றத்தினால் அதிகளவில் பெண்கள் பாதிப்படுகிறார்கள். அவர்களுக்காகவே கொழுந்து வெற்றிலை கொண்டு எவ்வாறு பேசியல் செய்யலாம் என பார்ப்போம்.

முடி உதிர்தல்:

வெற்றிலையை நன்றாக அரைத்து நல்லெண்ணெய்யுடன் குழைத்து கூந்தல் முடியின் வேர்க்கால்களில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்துவிடவும். பின்பு சிறிது நேரம் கழித்து, குளித்து விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நின்றுவிடும்.

பொடுகு:

வெற்றிலையை அரைத்து அத்துடன் பச்சை கற்பூரம், துளசி இலை சாற்றை கலந்து தலையில் நன்றாக தேய்த்து விடவும். சிறிது நேரம் கழித்து கூந்தலை கழுவி விடலாம். பொடுகு காணாமல் போய்விடும்.

முகப்பரு:

இரண்டு, மூன்று வெற்றிலையை விழுதாக அரைத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து முகப்பருக்கள் உள்ள இடத்தில் தடவி விட்டு உலர்ந்ததும் கழுவி விடலாம். நாளடைவில் முகப்பருக்கள் இருந்த இடமே தெரியாமல் மறைந்து போய்விடும். வெற்றிலை சாறை கொண்டு முகம் கழுவி வந்தால் முகப்பருக்கள் மீண்டும் வராது.

வியர்வை நாற்ற்றம்:

உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தையும் வெற்றிலை நீக்கக்கூடியது. கொதிக்கும் நீரில் வெற்றிலையை கலந்து அந்த சாறை வடிகட்டி, குளிக்கும் நீரில் கலந்துவிட்டு குளிக்கலாம். வியர்வை நாற்றம் அடியோடு அகலும். அணியும் உடைகளில் படிந்திருக்கும் வியர்வை நாற்றத்தை நீக்குவதற்கும் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். வெற்றிலை சாறு கலந்திருக்கும் நீரில் ஆடைகளை முக்கி உலர்த்தலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

east tamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

east tamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

Leave a Comment