வடமாகாணத்தில் இன்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் இன்று 877 பேரின் PCR மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில் 65 பேருக்கு தொற்று உறுதியானது.
யாழ் மாவட்டத்தில், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், யாழ் போதனா வைத்தியசாலையில் 3 பேர், மானிப்பாய் வைத்தியசாலையில் 5 பேர், தெல்லிப்பளை வைத்தியசாலையில் 2 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என, 46 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், முல்லைத்தீவு பொது வைத்தியாலையில் ஒருவர், வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் என, 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா மாவட்டத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் ஒருவர், என, 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினார்.
பலாலி படைத்தளத்தில் 2 பேர், முழங்காவில் கடற்படை தளத்தில் 7 பேர், பரந்தன் தனிமைப்படுத்தல் மையத்தில் 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.