25.9 C
Jaffna
December 27, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

கிளிநொச்சியில் தடுப்பூசி செலுத்திய 48 ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு திடீர் உடல்நலக்குறைவு!

சித்தரிப்பு படம்

தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 48 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அவர்களில் 25க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் காலை அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து தொழிற்சாலை பேருந்து மற்றும் வாகனங்களில் தொடர்ந்தும் வைத்தியசாலைக்கு மேலும் சிலர் அழைத்து வரப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகைதந்த ஊழியர்கள் இவ்வாறு திடீர் சுகவீனம் அடைந்த நிலையியே இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த நோயாளர்களில் அபாயகரமான தாக்கத்தில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும், சாதாரண நோயாளர் விடுதிகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட சுகாதார தரப்பினர் இது குறித்து தெரிவிக்கையில், அவர்களிற்கு தடுப்பூசி தொடர்பாக ஒவ்வாமை ஏற்படவில்லையென்றும், பயம் மற்றும் பதற்றத்தினாலேயே பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டதாகவும் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

Leave a Comment