வடக்கில் வீட்டில் வைத்தே கொரோனா தொற்றாளர்களிற்கு சிகிச்சை: ஆம் என்கிறார் மாவட்ட அதிகாரி; இல்லையென்கிறார் மாகாண பணிப்பாளர்!

Date:

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்கள் சிலர் அவர்களது வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், வடக்கில் அவ்வாறான சிகிச்சைகள் எவையும் இடம்பெறவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆர். கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, சகாயாமாதாபுரம், வைரவர் கோவிலடிப் பகுதியில் கடந்த திங்கள் கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில், ஏனைய தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்காது குறித்த வீட்டை தனிமைப்படுத்தி அவ் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளதுடன், சுகாதாரப் தரப்பினர் சிலர் பக்கச் சார்பாகவும், பொறுப்பற்ற விதமாகவும் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் லவன் அவர்களை தொடர்பு கேட்ட போது, குறித்த வீட்டில் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர்களை குறித்த வீட்டிலேயே தங்க வைத்து சிகிச்சையளிப்பதாகவும், அதனால் எந்த பாதிப்புக்களும் இல்லை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, கோவிட் தொற்றாளர்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் முறை வடக்கு மாகாணத்தில் இல்லை என தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் ஒரு விதமாகவும், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிகள் தரப்பில் வேறுவிதமாகவும் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஊழல் பெருச்சாளிகளின் மேடையில் புலிகளின் பரப்புரை: சிஐடியில் முறைப்பாடு!

அனுராதபுரத்தில் நடைபெற்ற 'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன' (SLPP) பேரணியில், தமிழீழ விடுதலைப்...

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்