மட்டக்களப்பு – மரப்பாலம் பிரசேத்தில் காட்டு யானை தாக்கி ஏழை விவசாயி ஸ்தலத்திலே மரணம்!

Date:

மட்டக்களப்பு – மரப்பாலம் பிரசேத்தில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி ஒருவர் இன்று 25.06.2021 உயிரிழந்துள்ளார்.

இலுப்படிச்சேனை பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய வன்னமணி கிருஸ்ணகுமார் என்பவரே பலியானவரென கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

நெல் வேளாண்மைப் பயிர்ப்பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தவேளை வயலிற்குள் நுழைந்த யானை காவலாளியைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக விவசாயிகள் முறையிடுகின்றனர். முறையான யானை வேலி அமைப்பதன் மூலமே விவசாயிகளின் உயிரிகளையும் பயிர்களையும் பாதுகாக்க முடியுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் சென்றிருந்தார்.

இதே வேளை யானை வேலி அமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ். சர்வானந்தன் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்