திரைப்பட இயக்குனராக ஆள் மாறாட்டம் செய்து நடிகையிடம் பாலியல் காட்சிக்கு அணுகியவர் கைது!

Date:

திரைப்பட இயக்குனராக ஆள்மாறாட்டம் செய்து பிரபல உள்ளூர் நடிகையிடம் அநாகரீகமான திட்டங்களை முன்வைக்க ஒரு நபருக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபர் ஜூலை 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தின் பிரதான சந்தேகநபர், பேராசிரியர் சுனில் அரியரத்னவைப் போல ஆள்மாறாட்டம் செய்ததாகவும், ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகையை அணுகியதாகவும், அந்த சமயத்தில் அவர் பாலியல் காட்சிகளை நடத்துவது குறித்து விசாரித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தற்போது கைதானவர், தொலைபேசி வழியாக நடிகையை அணுகி, பிரதான சந்தேகநபருக்கு உதவியுள்ளார்.

இது தொடர்பாக நடிகை போலீசில் புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் பென்தோட்டவை சேர்ந்த 47 வயது உதவி திரைப்பட இயக்குநராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த படத்தில் நடிப்பதற்கு 02 மில்லியன் சம்பளம் தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பேராசிரியர் சுனில் அரியரத்னவும் இந்த மோசடி குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து விசாரணைக்கு கோரியிருந்தார்.

சந்தேகநபர் தாக்கல் செய்த பிணை மனுவை காலி நீதிவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன நிராகரித்து ஜூலை 1 ஆம் திகதி வரை சந்தேநபரை விளக்கமறியலில் வைக்க  உத்தரவிட்டார்.

மேலும் சந்தேக நபர்களின் தொலைபேசி இலக்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அழைப்புக்களை ஆராயவும் உத்தரவிடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

ஊழல் பெருச்சாளிகளின் மேடையில் புலிகளின் பரப்புரை: சிஐடியில் முறைப்பாடு!

அனுராதபுரத்தில் நடைபெற்ற 'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன' (SLPP) பேரணியில், தமிழீழ விடுதலைப்...

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்