யாழ், மட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

இன்று (24) காலை 6 மணி முதல் 3 மாவட்டங்களில் உள்ள 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருணாகல் மாவட்டங்களை சேர்ந்த 7 கிராம சேவகர் பிரிவுகளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தின், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் மேற்கு மற்றும் ரெக்லமேசன் மேற்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சதொடுவாய் வடக்கு மற்றும் மஞ்சதொடுவாய் தெற்கு ஜின்னா வீதி கிராம சேவகர் பிரிவும், மண்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குருணாகல் மாவட்டத்தில், இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் வில்கொட கிராமும், கனுக்கெட்டிய கிராம சேவகர் பிரிவின் கனுக்கெட்டிய கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை வைத்தவர்கள் மீது சட்டமா அதிபர் வழக்கு தொடர்வார்!

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினரான 'திலீபன்' என்றழைக்கப்படும் இராசையா...

ஈரான் உச்சதலைவரை சந்தித்தார் சபாநாயகர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் குறித்து விவாதிப்பதற்காக, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர்...

உளறல் மன்னனுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எச்சரிக்கை!

நாடாளுமன்ற மரபுகளுக்கும் நிலையியல் கட்டளைகளுக்கும் (Standing Orders) அமையச் செயற்படுமாறு நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்