டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி: நிவேதா பெத்துராஜ் அதிர்ச்சி

Date:

டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், அங்கிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் புகார் தெரிவித்துள்ளதுடன் இதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும், கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குறிப்பிட்டு உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது...

பதவியை துறக்கிறார் பிரிட்டன் பிரதமர்

பல மாத கால அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...

சர்வதேச அணுசக்தி முகமையை நாட்டிற்குள் அனுமதிக்க ஈரான் இணக்கம்!

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்