நடிகர் கமல்ஹாசன், கண்ணதாசன் மற்றும் எம்எஸ்வி இருவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவர்கள் நினைவைப் போற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவைத் தன் கவிதைகளால், பாடல் வரிகளால், தத்துவங்களால் இனிய தமிழால் ஆட்சி செய்தவர் கவியரசர் கண்ணதாசன். எந்த சூழ்நிலைக்கும் நிமிடத்தில் பாடல் வரிகள் எழுதும் வல்லமை பெற்ற சிறந்த கவிஞர் கண்ணதாசன். அதேபோல் தனது மெல்லிசையால் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர் எம்எஸ் விஸ்வநாதன். அவர் வழங்கிய இசை மற்றும் பாடல்கள் காலத்தால் அழியாதவை. இன்று இருவருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள்.
எனவே அவர்களின் அரும்பெரும் சாதனைகளை நினைவு கூர்ந்து பலர் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் இரு ஆளுமைகள் குறித்து நினைவு கூறும் வகையில் பதிவிட்டுள்ளார்.
“இசையோடு தமிழையும் கலந்து இலவசமாய் தமிழ்க் கல்வி தந்த திரு.கண்ணதாசன், திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அய்யாக்களுக்கு ஒரே நாள் பிறந்த தினமாய் அமைந்தது இன்னொரு அற்புதப் பொருத்தம் . இருவரும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல.. இந்தியாவின் பொக்கிஷங்கள். போற்றி..போற்றி..” என்று தெரிவித்துள்ளார்.