இங்கிலாந்து நாட்டில் 6 வகையான டைனோசர் இனங்களின் பாத சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அழிந்து போன 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தய உயிரினமாகும். டைனோசர் பாத சுவடானது உயர்ந்த மலைப்பகுதியிலும் கடற்கரைப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹேஸ்டிங்ஸ் மியூசியம் அண்ட் ஆர்ட் கேலரி தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் டைனோசர் இனங்களின் பாத சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டது இது தான் முதல் முறை என தொல்லுயிரியல் துறை பேராசிரியர் டேவிட் மார்டில் தெரிவித்துள்ளார். இது பார்ப்பதற்கு மிக கரடுமுரடாக காணப்படும் எனவும் இந்த டைனோசர்கள் ஆங்கிலோசார்ஸ் (Ankylosaurs)என்ற வகையைச் சார்ந்தது என்றும் தெரிவித்தனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிய வகை டைனோசர்களின் பாத சுவடுகள் ஃபோக்ஸ்டோன் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பேராசிரியர் டேவிட் மார்டில் தெரிவித்துள்ளார்.