மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் எம்.பி பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2011 ஒக்ரோபர் 11ஆம் திகதி முல்லேரியா பகுதியில் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டனர்.
2016 செப்ரெம்பர் 8ஆம் திகதி துமிந்த சில்வாவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
பொசான் பூரணை தினத்தை முன்னிட்டு இன்று 94 கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1