மணமகனிற்கு பேப்பர் படிக்க தெரியாததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!

Date:

உ.பி மாநிலம் சாதர் கோட்வாலி என்ற பகுதிக்குட்பட்ட ஜமாலிப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அர்ஜூன் சிங். இவருக்கும் பான்சி பகுதியைச்சேர்ந்த அர்ச்சனா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 20ம் திகதி நடக்கிவிருந்தது. திருமண நிகழ்விற்காக மண்டபத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டார் வரவேற்றனர். அவர்களுக்கு வரதட்சனையாக ஒரு பைக் மற்றும் கொஞ்சம் பணம் எல்லாம் கொடுத்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் மணமேடைக்கு வந்த மாப்பிள்ளை அவருக்கான இருக்கையில் அமர்ந்திருந்தார். மாப்பிள்ளை எப்பொழுதும் கண்ணாடி அணிந்த படியே இருந்தார். அதனால் பெண் வீட்டாருக்கு சந்தேகம் வந்தது. மாப்பிள்ளைக்கு கண்ணாடி இல்லாமல் இருந்தால் கண்ணு தெரியாதா என்று கேட்டனர். மாப்பிள்ளை வீட்டாரும் அதற்கு ஏதேதோ சொல்லி சமாளித்துள்ளனர்.

ஆனால் இறுதியாக இந்த செய்தி பெண்ணின் காதிற்கு சென்றுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் மாப்பிள்ளையின் கண்ணை சோதனை செய்ய ஒரு இந்தி செய்திதாளை கொடுத்து கண்ணாடியில்லாமல் வாசித்து காண்பிக்க சொல்லியுள்ளார். ஆனால் மாப்பிள்ளைக்கு கண்ணாடி இல்லாமல் வாசிக்க தெரியவில்லை. இதையடுத்து மணப்பெண் திருமணத்தை நிறுத்திவிட்டு மண்டபத்திலிருந்து வெளியேறினார். பெண் வீட்டார் கொடுத்த வரதட்சனை மற்றும் சீதனங்களை எடுத்துவிட்டு வெளியேறினர்.

இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் மணமகனிற்கு பேப்பர் படிக்க தெரியாததால் திருமணத்தை மணமகளே நிறுத்திய சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இதே போல மணமகனிற்கு உருது படிக்க தெரியாததால் திருமணம் நின்று போன சம்பவம் நடந்தது. அதே போல இந்த சம்பவமும் நடந்துள்ளது

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்