விஜய்யின் ஆக்ஷன் சரவெடியில் உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’. இந்த படத்தை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பிரம்மாண்ட உருவாக்கி வருகிறார் நெல்சன். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் தொடங்கிய படக்குழு, ஒரு பாடல் காட்சியை படமாக்கியது. இதையடுத்து 16 நாட்கள் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கான பணிகளை வேகமாக செய்து வருகிறது. அடுத்த மாதம் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கவுள்ள இந்த படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சியை பதிவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் முழுக்க, முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகிறது. அனிரூத் இசையமைத்து வருவதால் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டடிக்கும் என கூறப்படுகிறது. அதோடு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க யோகிபாபுவும் இணைந்துள்ளது கூடுதல் சிறப்பு.
இரு தினங்களுக்கு விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் டைட்டில் மற்றும் இரு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நிறுவனம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல ஓடிடித்தளமான நெட்பிளிக்ஸ் ‘பீஸ்ட்’ படத்தின் உரிமையை அதிக தொகைக் கொடுத்து கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் பொங்கலையொட்டி இந்த படம் திரையரங்கில் ரிலீசாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், அதன்பிறகு ஒடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது