வடக்கிற்கு வந்த பாவனைக்கு உதவாத 700 Kg கோழி இறைச்சி சிக்கியது!

Date:

மனித நுகர்வுக்கு தகுதியற்ற 700 கிலோகிராம் கோழி இறைச்சியை கொண்டுசென்ற குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று (22) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி 700 கிலோ கிராம் கோழி இறைச்சியினை பாதுகாப்பற்ற முறையிலும், நுகர்வோர் பயன்படுத்த முடியாத நிலையில் கொண்டுசென்ற போது வவுனியா ஈரட்டை பகுதியில் வைத்து கோழி இறைச்சி கொண்டுவந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி 700 கிலோ கிராம் கோழி இறைச்சியினை கொண்டு சென்ற போது வவுனியா தெற்கு சுகாதார பொது பரிசோதகர்களால் குறித்த வாகனம் ஈரட்டை பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் கோழி இறைச்சி பழுதடைந்த நிலையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் இருந்ததனால் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா தெற்கு பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு...

2,190 மில்லிகிராம் ஹெரோயினுடன் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச்...

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்