25 C
Jaffna
February 6, 2025
Pagetamil
சினிமா

லூசிஃபர் படத்தில் முதலமைச்சரின் மகளாகும் நயன்தாரா!

மலையாளத்தில் மாபெரும் ஹிட்டத்த திரைப்படம் ‘லூசிஃபர்’. மோகன்லாலின் அசத்தலான நடிப்பில் உருவான இப்படத்தை பிரத்விராஜ் இயக்கியிருந்தார். அரசியல் மற்றும் கேங்ஸ்டர் ஆகிய இரண்டையும் மையமாக வைத்து உருவாகிய இப்படம் வசூல் சாதனையை படைத்தது. இந்த படத்திற்கு இந்திய அளவில் பெரிய வரவேற்பு இருந்தது. தற்போது இந்த படம் பலமொழிகளில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தெலுங்கு உரிமையை நடிகர் சிரஞ்சீவி வாங்கி வைத்திருக்கிறார். இதையடுத்து இந்த படத்தை விவி நாயக், சுஜீத் ஆகிய இருவரில் ஒருவர் இயக்குவதாக இருந்தது. முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில் சில காரணங்களால் இருவரும் இயக்கவில்லை. இதைத்தொடர்ந்து ‘தனி ஒருவன்’ படத்தை இயக்கிய மோகன்ராஜா இயக்குவதாக அறிவிக்கப்பட்டு படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த படத்தின் பணிகளை மோகன்ராஜா செய்து வந்தார். தெலுங்குக்கு ஏற்றாற்போல் கதையில் சில மாற்றங்களை செய்ய சொன்னார் சிரஞ்சீவி. அந்த மாற்றங்களை உடனடியாக செய்துக்கொடுத்தார் மோகன்ராஜா. இதற்கிடையே இந்த படத்திலிருந்து சமீபத்தில் விலகினார் மோகன்ராஜா என்ற தகவல் கசிந்தது. ஆனால் அந்த தகவலை சிரஞ்சீவி தரப்பு மறுத்தது. இந்நிலையில் படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. ‘ஆச்சார்யா’ படத்தின் பணிகளும் தற்போது முடியவுள்ளது. இதையடுத்து விரைவில் சிரஞ்சீவி இந்த படத்தில் இணையவுள்ளார். அதேநேரம் நயன்தாரா இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் முதலமைச்சர் மகள் கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Pagetamil

‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் சிலம்பரசன்

Pagetamil

இயக்குநர் அருண்குமார் திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Pagetamil

ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம்!

Pagetamil

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

Leave a Comment