26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
உலகம்

கியூபாவின் புதிய தடுப்பூசி அப்தலா!

தமது தயாரிப்பான அப்தலா தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக 92.28% பயனளிக்கிறது என்று கியூபா தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சோபேரானா தடுப்பூசி குறித்த அறிவிப்பை கியூபா வெளியிட்டது. இதில் மூன்று டோஸ்களைக் கொண்ட சோபேரானா தடுப்பூசி தனது இரண்டு டோஸ்களிலே கொரோனா வைரஸுக்கு எதிராக 62% பலனளிக்கிறது என்று கியூபா தெரிவித்தது.

இந்த நிலையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றொரு தடுப்பூசியான அப்தலா தடுப்பூசி குறித்த விவரத்தை கியூபா வெளியிட்டுள்ளது.

அப்தலா கொரோனா தடுப்பூசி மூன்று டோஸ்களைக் கொண்டது. மூன்றாம் கட்டப் பரிசோதனையில் அப்தலா வைரஸ் கொரோனா வைரஸுக்கு எதிராக 92.28% பலனளிக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கியூப ஜனாதிபதி மிகல் டையஸ் கேனல் கூறும்போது, “பின்லே இன்ஸ்டிடியூட், ஜெனிடிக் இன்ஜினீயரிங் மற்றும் பயோடெக்னோலஜி மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் பல தடைகளுக்கு இடையே இரண்டு பயனுள்ள கொரோனா தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் இரண்டு தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வரவுள்ளன” என்று தெரிவித்தார்.

அர்ஜெண்டினா, மெக்சிகோ, வியட்நாம், வெனிசுலா ஆகிய நாடுகள் கியூபாவிடமிருந்து கொரோனா தடுப்பூசிகள் வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளன.

கொரோனாவுக்கு எதிராக அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த சில தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

கியூபாவின் பொது சுகாதார அமைச்சகம் திங்களன்று COVID-19 க்கு எதிரான அவசரகால தடுப்பூசி திட்டத்தை நாடெங்கும் பரவலாக விரிவாக்கியுள்ளது. அப்தலா தடுப்பூசியே வழங்கப்பட்டு வருகிறது.

56 நாட்களில் மூன்று டோஸ் தேவைப்படும் சோபெரானா -02 க்கு பதிலாக, 28 நாட்களில் இரண்டு டோஸ் வழங்கப்படும் அப்தலா தடுப்பூசியைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் வைரஸ் கட்டுப்பாட்டை துரிதப்படுத்த அதிகாரிகள் நம்புகின்றனர்.

அவற்றின் பெயர், பயன்படுத்தப்படும் நாடுகளின் விவரம் வருமாறு-

பைஸர் & பயோடெக்

பைஸர் கரோனா தடுப்பூசிகள் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அஸ்ட்ராஜெனகா (கோவிஷீல்ட்)

உலக அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி இது. பிரிட்டன், மலேசியா, தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜோன்சன் & ஜோன்சன்

சிங்கிள் டோஸ் தடுப்பூசியான இது அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மொடர்னா

கனாடா, டென்மார்க், பின்லாந்து, ஜப்பான், போர்ச்சுக்கல், தைவான் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

சினோஃபார்ம்

சீனா, இலங்கை, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இவை மட்டுமல்லாது ஸ்புட்னிக்-வி, கோவாக்சின், சினோவேக் போன்ற தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அங்கீகாரமளித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

Update 2 – தென்கொரிய விமான விபத்து

east tamil

தென்கொரியாவில் விமான விபத்து: 28 பேர் பலி

east tamil

அஜர்பைஜான் பயணிகள் விபத்துக்கு ரஷ்ய ஏவுகணை காரணமா?

Pagetamil

Leave a Comment