அசைவ உணவுகளை கர்ப்ப காலத்தில் உண்பது குழந்தைக்கும் தாய்க்கும் கேடு விளைவிக்கும் என்று சிலர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் இது முற்றிலும் தவறானது என்றும், அசைவ உணவுகளை கர்ப்பகாலத்தில் சேர்த்துக்கொள்வதில் எந்தவித தீங்கும் ஏற்படாது என்றும் கூறுகின்றனர்.
கர்ப்ப காலத்தில் அசைவ உணவுகளை உண்ண தயங்குவதற்கு காரணம், அசைவ உணவுகளில் அதிகமாக உள்ள பொட்டாசியம் மற்றும் கொழுப்பு ஆகும். இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் அசைவ உணவில் இருந்து வெளிவரும் எண்ணெய் தினசரி உணவுகளில் கர்ப்பிணிப் பெண்கள் சேர்த்துக்கொள்ள ஏற்றதல்ல.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் உங்கள் உணவில் அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இல்லாவிட்டால் நீங்கள் அசைவ உணவுகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். கோழி, மீன், முட்டை போன்றவற்றை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
உணவுகளை உட்கொள்வதன் மூலம் கர்ப்பிணி தாயின் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கிடைக்கிறது என்றும், மேலும் தாயின் மூலம் கருவிற்கு ஆரோக்கிய வளர்ச்சி கிடைப்பதில் இந்த சத்துக்கள் பங்களிக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதிகமான அசைவ உணவுகளின் நுகர்வு கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏற்றதல்ல. இதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல் நலக் குறைபாடு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் உண்ண கூடிய அசைவ உணவுகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலில் உள்ள அசைவ உணவுகளை அளவாக உட்கொள்ள வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல்கள் கர்ப்பிணி பெண்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் கருத்துக்கள் மூலம் சேகரிக்கப் பட்டவை ஆகும். ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும். எனவே கர்ப்பிணிப் பெண்கள் எந்த மாதிரியான அசைவ உணவுகளை விரும்புகிறார்கள் என்பதை ஆய்வில் கண்டுபிடித்து அதன் படி கீழே குறிப்பிட்டுள்ள பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உட்கொள்ளக் கூடிய அசைவ உணவுகளில் சிக்கன் இடம்பெறுகிறது. ஆனால் அதிகமாக காரம் உள்ள சிக்கன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். மிதமான காரம் உள்ள சிக்கன் உணவுகளை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளலாம்.
ஆட்டிறைச்சி
கர்ப்ப காலத்தில் உண்ண ஏற்ற உணவு மட்டன் ஆகும். இந்த மட்டனில் புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. மற்ற இறைச்சிகளை காட்டிலும் கர்ப்ப காலத்தில் உள்ள கூடிய ஒரு ஆரோக்கியமான இறைச்சியாக மட்டன் உள்ளது.
மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியை கர்ப்பகாலத்தி பெண்கள் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். மாட்டிறைச்சியில் அதிகம் கொழுப்பு இருப்பதன் காரணமாக உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். குறைந்த காரம் மற்றும் மசாலா சேர்த்த மாட்டிறைச்சி உணவுகளை கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வேகவைத்த முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது கரு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் கரு மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் முட்டையின் வெள்ளைக்கரு பெரிதும் உதவுகிறது.
அசைவ சூப்
கர்ப்ப காலத்தில் அசைவ உணவில் சமைக்கப்பட்ட சூப்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். சூப்களில் ஆக்சிஜனேற்றிகள் நிரம்பியுள்ளதால் இது ஜீரணமாக எளிதாக உள்ளது. கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய ஆரோக்கிய உணவு பட்டியலில் இது இடம் பெறுகிறது.
தவிர்க்க வேண்டிய அசைவ உணவுகள்
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமற்ற மற்றும் எடை அதிகம் ஏற்படக்கூடிய அசைவ உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். இதனால் ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பு, அதிக கொழுப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இதை தவிர்ப்பது நல்லது. மேலும் குறைந்த அளவில் அசைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். பின்வரும் அசைவ உணவுகளை முடிந்தவரை கர்ப்பகாலத்தில் தவிர்த்துவிடுங்கள்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
நன்றாக சமைக்கப்பட்ட அசைவ உணவுகள் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமானது. அளவான உணவு என்றுமே ஆரோக்கியத்தை தரும் என்பதால் அசைவ உணவுகளை கர்ப்ப காலத்தில் அளவாக உட்கொள்வது நினைவில் கொள்ளுங்கள்.