கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு, திருகோணமலையில் 11 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

இன்று (23) காலை 6 மணி முதல் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகராஜ வலவ்வ கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவின் முதலாம் மற்றும் இரண்டாம் குறுக்கு வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரிவு 4, காத்தான்குடி பிரிவு 5 தெற்கு, காத்தான்குடி பிரிவு 6 மேற்கு, புதிய காத்தான்குடி பிரிவு வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா வீதி, ஏ.எல்.எஸ். மாவத்தை, நூரானியா பொது மயான வீதி மற்றும் கடற்கரை வீதி என்பனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Related posts

இலங்கை கிரிக்கெட்டிற்கு புதிய தெரிவுக்குழு!

Pagetamil

21 வயது யுவதியை அள்ளிச் சென்ற அடையாளம் தெரியாதவர்கள்!

Pagetamil

மருதமுனை பிரதேசம் ஆபத்தான நிலையில் உள்ளது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!