விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர், டிஜிட்டல் இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு மற்றொரு பொறுப்பை வழங்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வியத்மக அமைப்பின் தலைவராக நாமலை நியமிக்க ஜனாதிபதி விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதில் வியத்மக அமைப்பு பெரும் பங்காற்றிருந்தது. கல்வியிலாளர்களை ஒன்றுதிரட்டி, அப்பிராய மாற்றம் ஏற்படுத்துவதில் தீவிரமாக செயற்பட்டிருந்தது.
கடந்த வாரம் நடைபெற்ற வியத்மக அமைப்பின் நிறைவேற்று கூட்டத்தில் ஜனாதிபதியால் இந்த முன்மொழிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முன்மொழிவிற்கு, கலவையான எதிர்வினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முன்மொழிவிற்கு கணிசமான எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன.
இந்த நேரத்தில் இதை செய்யக்கூடாது என்று சிலர் பரிந்துரைத்துள்ளனர் என்று அறியப்படுகிறது.
அந்த அமைப்பின் முக்கியஸ்தரான, இராஜாங்க அமைச்சர் நாலக கோதவெவ, இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.