இங்கிலாந்தை தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்தியது இத்தாலி: முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு!

Date:

கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என இத்தாலி நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.99 கோடியை தாண்டி உள்ளது. இந்நிலையில் இத்தாலி நாட்டில் உள்ள மக்கள் வரும் 28ம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக் கவசங்கள் அணிவதிலிருந்து பொது மக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

அதே சமயம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஒரு சில பகுதிகளில் அந்த தளர்வுகள் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாலும், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதாலும் முகக்கவசம் அணிய தேவையில்லை என அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இங்கிலாந்தை அடுத்து இத்தாலி நாடும் முக கவசம் அணிவதிலிருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

விபத்தில் பின்னாலிருந்த காதலி மரணம்: காதலன் எடுத்த விபரீத முடிவு!

பாடசாலைப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன்...

ஷிராந்தி இன்று தேசிய கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்