விஜய்யின் ’Beast’ தமிழ் அர்த்தம் என்ன? கூகுலில் தேடும் ரசிகர்கள்!

Date:

‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் யோகிபாபு காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. இதில் ஒரு பாடல் காட்சியும், சண்டைக்காட்சியும் படமாக்கப்பட்டது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய் பிறந்தநாள் நாளை கொண்டாடுவதால் இந்த படம் குறித்து அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி ‘தளபதி 65’ என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்துக்கு ‘பீஸ்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதோடு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியாகி சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது. இந்த போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜயின் 65-வது படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு என்ன தமிழ் அர்த்தம் என ரசிகர்களுக்கு புரியவில்லை. அதனால் கூகுலில் இதற்கு என்ன அர்த்தம் என ரசிகர்கள் தேடி வருகின்றனர். பீஸ்ட் என்ற சொல்லிற்கு அசுரத்தனமான பெரிய மிருகம் என கூறப்படுகிறது. அதேபோன்று யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரைதான் பீஸ்ட் என அழைப்பார்களாம். எனினும் இந்த வித்தியாசமான பெயரால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்