29.1 C
Jaffna
April 10, 2025
Pagetamil
உலகம்

15 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் துபாய் சர்வதேச விமான நிலைய முனையம்!

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஒன்றாவது முனையம் வியாழனன்று திறக்கப்படும் என அந்நாட்டு விமான நிலைய இயக்குனர் அறிவித்துள்ளார்.

சர்வதேச போக்குவரத்து மையமான துபாய் விமான நிலையம் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. அதன் சர்வதேச விமான நிலைய முனையம் ஒன்றில் பொதுத்தளம் டி அமைந்துள்ளது. இது ஆண்டுக்கு 1.8 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாகும்.

இந்நிலையில் நைஜீரியா, தென்னாப்பிரிக்காவில் இருந்து வருபவர்களுக்கான தடையை நீக்குவதாகவும், அங்கிருந்து நேரடி விமானங்கள் புதன்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படும் என நேற்று அறிவித்தனர். குறிப்பிட்ட இத்தகைய தளர்வுகள் காரணமாக வியாழன் முதல் ஒன்றாவது முனையம் இயங்கும். வெளிநாட்டு விமானங்களுக்கான முனையம் 2 மற்றும் 3லிருந்து 40க்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிறுவனங்கள் இப்போது படிப்படியாக மீண்டும் திறக்கப்பட உள்ள ஒன்றாவது முனையத்திற்கு மாற்றப்படும் என அறிவித்துள்ளனர்.

வருகை தருபவர்கள் கோவிட் நெகடிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வருகை தரும் இடத்திலும் பரிசோதனை நடக்கும். இந்தியாவில் இருந்து வருபவர்கள் தங்கள் சோதனை முடிவுகளைப் பெறும் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள். புதிய அறிவிப்பில் இந்தியாவிலிருந்தும் விமான சேவையை தொடங்கலாம் என கூறியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குடியேற்ற விசா வைத்திருக்கும் இந்தியர்கள், யு.ஏ.இ., அங்கீகரித்த கோவிட் தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளைப் பெற்றிருந்தால் தான் நுழைய முடியும். குடியேற்ற விசா இல்லாதவர்கள் தடுப்பூசியே போட்டிருந்தாலும் கடந்த இரண்டு வாரங்களில் இந்தியாவுக்கு சென்றிருந்தால் நுழைய அனுமதி கிடையாது என்ற தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

இரவு விடுதி கூரை இடிந்து விழுந்து 79 பேர் பலி

Pagetamil

மிரட்டிக் கொண்டே பேச முடியாது!

Pagetamil

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுவதாக ஹங்கேரி அறிவிப்பு!

Pagetamil

ட்ரம்பின் “விடுதலை தின” வரிகள் அறிவிப்பு: சுண்டங்காய் சைஸ் இலங்கைக்கு இவ்வளவு பெரிய வரியா?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!