வாய் பேச மற்றும் காது கேட்க இயலாதவர்களை கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சித்த பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர்.உத்தர பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க அரசு நடக்கிறது. இங்குள்ள நொய்டாவில் வசிப்பவர்கள் உமர் கவுதம், ஜஹாங்கீர்.
வாய் பேச மற்றும் காது கேட்க இயலாத மாற்றுத் திறனாளியான பெண் மற்றும் சிறுமியை கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்துக்கு இவர்கள் மாற்ற முயற்சித்தனர்.பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது, கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதுவரை, 1,000 பேரை கட்டாய மத மாற்றம் செய்துள்ளனர். இதற்காகவே, நொய்டா ஜாமியா நகரில் ‘இஸ்லாமிய தாவா சென்டர்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு தான், பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்யும் பணி நடக்கிறது. பணம், வேலைவாய்ப்பு, திருமணம் ஆகியவற்றை காரணமாக வைத்து, ஏராளமானோரை மதம் மாற்றும் பணி நொய்டாவில் நடைபெற்று வருகிறது. ஒரு பெரும் கும்பல் இந்த வேலையை செய்து வருகிறது. அவர்களை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.