நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் பிற ஆயுதக்குழுக்கள் பள்ளி மாணவர்களை கடத்தி பிணைய கைதிகளாக வைத்துக் கொண்டு தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்துக் கொள்கின்றன.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோ ஹரம் பயங்கரவாதிகள் அவ்வப்போது பள்ளி மாணவர்களை கடத்தி சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் பிற ஆயுதக்குழுக்கள் பள்ளி மாணவர்களை கடத்தி பிணைய கைதிகளாக வைத்துக் கொண்டு தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்துக் கொள்கின்றன.
குறிப்பாக கடந்த சில மாதங்களாக நைஜீரியாவில் பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து மாணவர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தநிலையில் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கெப்பி மாகாணத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கூடங்களை மூட மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அந்த மாகாணத்தில் தற்போது 7 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
மாகாணம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னர் மேலும் பல பள்ளிக்கூடங்கள் மூடப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.