நடிகர் விக்ரம் பிரபு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.
மக்களை ஆட்டிப்படைத்து வந்த கொரோனாவின் வேகம் தற்போது குறைய ஆரம்பித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அத்தியாவசியம். எனவே 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அரசும் மக்கள் அனைவருக்கும் போதுமான அளவு தடுப்பூசி கிடைக்க போதிய முயற்சிகள் எடுத்து வருகிறது.
தற்போது நடிகர் விக்ரம் பிரபு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். “இது பாதுகாப்பிற்கான ஒரு படியாகும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றவும். முகமூடி அணிந்து வெளியே செல்லுங்கள். கடந்த ஒரு மாதத்திலிருந்து கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை குறைந்துவிட்டன. ஆனால் இந்த குழப்பம் ஒரு நபரிடமிருந்து தான் தொடங்கியது என்பதை மறந்து விடக்கூடாது! சமூக விலகலைக் கடைபிடிக்கவும்” என்றும் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.
விக்ரம் பிரபு தற்போது ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தில் நடித்து வருகிறார். ‘டானாக் காரன்’ என்ற படத்திலும் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் விக்ரம் பிரபு நடித்து வருகிறார்.