அமெரிக்காவைச் சேர்ந்த பைக் ஸ்டென்ட் வீரர் அலெக்ஸ் ஹார்வில், இவர் பைக்கில் சாகசங்கள் செய்து வருகிறார். இதற்காக முறையான பயிற்சி பெற்று செய்து வருகிறார். இவர் கடந்த 2013ம் ஆண்டு உலகிலேயே நீண்ட தூரம் பைக்கில் பைக்கில் பறந்த சாகத்தை செய்துள்ளார். அவர் அப்பொழுது 297 அடி தூரம் பைக்கில் விண்ணில் பறந்து சாதித்துள்ளார். அந்த சாதனையை முறியடிப்பதற்காக கடந்த வாரம் அவர் அமெரிக்காவில் உள்ள மோசஸ் லேக் ஏர்ஷோ என்ற இடத்தில் உலக சாதனை செய்வதற்காக முயற்சி செய்தார். இந்த முறை அவர் 351 அடி தூரத்தை பைக்கில் பறந்து செல்ல முடிவு செய்தார். அதற்காக ஏற்பாடுகளை செய்திருந்தார்.
உலக சாதனை முயற்சி செய்தவற்கு முன்பு சில பயிற்சிகள் எடுக்கப்படுவது வழக்கம் அப்படியாக இவர் பயிற்சி எடுக்கும் போது அவர் வேகமாக பைக்கில் வந்து விண்ணில் பறக்கும் போது எதிர்பாராத விதமாக அவர் சரியாக லேண்ட் ஆகாமல் போய்விட்டது இதனால் அவர் அங்கிருந்த மணல் மேட்டில் மோதி விபத்திற்குள்ளானார். இதனால் படுகாயமடைந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் பயிற்சியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
ABD’de 28 yaşında deneyimli motosiklet sürücüsü Alex Harvill, 106.98 metrelik akrobasi atlayışı ile dünya rekoru kırmaya çalışırken hayatını kaybetti. pic.twitter.com/r2ZuxB95Hm
— Griffin (@griffincomtr) June 19, 2021
பைக் ரேசர் உலக சாதனை முயற்சிக்காக தன் உயிரையே விட்ட சம்பவம் தற்போது பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.