25.7 C
Jaffna
January 17, 2025
Pagetamil
இந்தியா

பாரத் பயோடெக் ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3வது கட்ட சோதனை முடிவுகள்..

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் உடையது என்பது 3வது கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு நிபுணர்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவாக்சின் தடுப்பூசியின் 3வது கட்ட சோதனை முடிவடையாத நிலையிலேயே அவசரகால பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி மாதமே மத்தியஅரசு ஒப்புதல் வழங்கியது. கோவாக்சின் தடுப்பூசி3ம் கட்ட மனித பரிசோதனைகள் செய்யாமலேயே பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதற்கு மருத்துவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருந்தாலும், தொற்று பரவலை கருத்தில்கொண்ட நாடு முழுவதும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தடுப்பூசி போடும் பணி தீவிரமைடைந்து வருகிறது.இநத் நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியின் 3ம் கட்ட மனித பரிசோதனை முடிவு வெளியாகி உள்ளது. அதில் கோவாக்சின் செயல்திறன் 77.8% என்று தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனம் 25,800 பேரிடம் 3ம் கட்ட பரிசோதனை செய்ததில் 77.8% செயல்திறன் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக வெளியான அறிக்கையில், 81% செயல்திறன் மிக்க தடுப்பூசி என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், திருத்தப்பட்ட அறிக்கையின்படி, 77.8% செயல்திறன் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மருத்துவ நிபுணர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய தேர்தல் குறித்து மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம்!

east tamil

“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்” – தவெக தலைவர் விஜய் உருக்கம்

Pagetamil

புலிப்பூச்சாண்டி வேண்டாம்: பழ.நெடுமாறனின் விண்ணப்பத்தை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

குடிபோதையில் மணமகனின் மோசமான செயல்

east tamil

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் கவனம் பெற்ற இன்பநிதி

Pagetamil

Leave a Comment