உலகம்

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு கட்டாயம் சிறைத் தண்டனை: பிலிப்பைன்ஸ் பிரதமர் எச்சரிக்கை!

பிலிப்பைன்சில் கோவிட் தடுப்பூசியைப் போட மறுப்போருக்கு கட்டாயம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தடுப்பூசி நிலையங்கள் சிலவற்றில் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் குறைவான மக்களே ஆர்வம் காட்டியுள்ளனர். இதையடுத்து அந்நாட்டுப் பிரதமர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே தெரிவித்துள்ளதாவது,

நாட்டின் மொத்த மக்கள் தொகையான 110 மில்லியனில் இந்த ஆண்டுக்குள் 70 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடுவது அரசாங்கத்தின் இலக்கு. இதுவரை அங்கு 2.1 மில்லியன் பேருக்கு இரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு மருத்துவ நெருக்கடியில் இருக்கிறது.

அரசின் ஆலோசனையைப் பொருட்படுத்த மக்கள் மறுப்பது எரிச்சலூட்டுவதாக உள்ளது. கோவிட் தடுப்பூசியைப் போட மறுப்போருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – ஊரடங்கை நீட்டிக்க இங்கிலாந்து பரிசீலனை!

divya divya

இஸ்ரேலில் நடந்த வான்வெளி தாக்குதல் : தாயின் கரங்களில் இருந்து மீட்கப்பட்ட 5 மாத குழந்தை!

divya divya

சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் ஒப்புதல்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!