ஸ்காட்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 தலைமுறையினர் ஒரே காலத்தில் வாழ்ந்து வரும் அதிசயம் நடந்துள்ளது.
ஸ்காட்லாந்தின் இடின்பர்க் பகுதியைச்சேர்ந்தவர் மேரி மார்சல். 8 குழந்தைகளுக்கு தாயான இவர் தற்போது 6வது தலைமுறை பாட்டியாகவும் உள்ளார். இரண்டாம் உலகப்போர் காலத்திருந்தே வாழந்து வரும் இவருக்கு தற்போது 86 வயதாகிறது. இவர் குடும்பத்தில் இவரது மகள், அவரது மகள், அவரது மகள் என 5 தலைமுறையினர் இருந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவரது குடும்பத்தில் 6வது தலைமுறை குழந்தை பிறந்துள்ளது.
மேரி மார்சலுக்கு 8 குழந்தைகள் இருந்த நிலையில் அனைவரும் பெண்கள்தான். அதில் ஒரு பெண் தான் ரோஸ் தர்பன்,இவருக்க தற்போது 68 வயதாகிறது. அவருக்கு முன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அதில் ஒரு பெண் குழந்தை தான் சைரல் போர்த்விக் இவருக்கு தற்போது 50 வயதாகிறது. இவருக்கு 4 குழந்தைகள் உள்ளன. அதில் ஒரு குழந்தை தான் கேரிடோவ். இவருக்கு தற்போது 35 வயதாகிறது. கேரிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு பெண் குழந்தை தான் டோனி லேஜ் அடிகன், அடிகனிற்கு தற்போது 17 வயதான நிலையில் அவர் கர்ப்பமாக இருந்தார். கடந்த வாரம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நைலா என பெயர் வைத்துள்ளனர்.
இந்த குடும்பத்தில் தற்போது மேரி மார்சல் முதல் நைலா வரை 6 தலைமுறையினர் ஒரே காலத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு ஒரே குடும்பத்தின் 6 தலைமுறையினர் ஒரே காலத்தில் வாழ்ந்து வருவது மிகவும் அரிதான ஒன்று வேறு எங்கும் இப்படி இருக்கிறதா என தெரியவில்லை. தற்போது இவர்கள் தனித்தனியாக இருந்தாலும் அருகருகே தான் வசித்து வருகின்றனர். 10-15 நிமிட பயணத்தில் தான் அத்தனை குடும்பமும் உள்ளது. ஏதேனும் விஷேச நாட்கள் வாந்தால் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடி வருகின்றனர். தற்போது மேரி மார்சலுக்கு நைலாவுடன் சேர்த்து 90 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர்.