உ.பி மாநிலம் கான்பூரை அடுத்த ஷான்ஜனாபூர் பகுதியை சேர்ந்தவர் அனுஜ் சேத்தன் கத்தாரியா, இவர் தன்னை ஒரு தந்திரி என ஏமாற்றி கடந்த 2005ம் ஆண்டு மணிப்பூரி மாவட்டத்தைச்சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதன் பின் 2010ம் ஆண்டு பெரேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இரண்டாவது திருமணம் செய்தது முதல் மனைவிக்கு தெரியாது. முதல் மனைவியிடம் விவாகரத்தும் பெறவில்லை. அதன் பின் அவர் 2014ம் ஆண்டு அவுரையா மாவட்டத்தைச்சேர்ந்த பெண்ணை 3வதாக திருமணம் செய்தார். அதன் பின் அவர் 3வது மனைவியின் உறவினர் பெண் ஒருவரையும் திருமணம் செய்துள்ளார். அந்த பெண் இவரது 4வது மனைவி என தெரிந்ததும். துக்கம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையில் இவர் கடந்த 2016ம் ஆண்டு அவரது சொந்த ஊரிலேயே தனது தம்பியின் மனைவியை கற்பழித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இதன் பின் வெளியே வந்த இவர் 2019ம் ஆண்டு கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுடன் வல்லுக்கட்டாயமாக உடலுறவு வைத்துள்ளார்.அதற்கு அந்த பெண் ஒத்துப்போகாததால் அந்த பெண்ணை கொலை செய்யவும் முயன்றுள்ளார். அதிலிருந்து எப்படியோ தப்பித்து அவரது 5வது மனைவி அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
நடந்த விசாரணையில் தான் அவருக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகிவிட்டதையும், அவருக்கு புகார் அளிக்க வந்த பெண்ணுடன் சேர்த்து மொத்தம் 5 மனைவிகள் என்றும் அதில் ஒருவர் உயிருடன் இல்லை என்பதும் தெரியவந்தது. இது மட்டுமில்லாமல் இவர் தற்போது 32 பெண்களுடன் தொடர்பில் இருப்பதும், 5வது மனைவி உடலுறவுக்கு ஒத்துப்போகாததால் 6வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அதற்காக அவர் லக்கி பாண்டே என்ற பெயரில் ஒரு போலியான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு பல பெண்களிடம் பல விதமாக பேசியுள்ளார். சில பெண்களிடம் தான் ஒரு டீச்சர் எனவும், சில பெண்களிடம் தான் ஓட்டல் நடத்தி வருவதாகவும், சில பெண்களிடம் தான் பிஎஸ்சி பட்டதாரி எனவும் பேசியுள்ளார். ஆனால் இவர் உண்மையில் 8ம் வகுப்பு தான் படித்துள்ளார்.
16 ஆண்டுகளில் 5 பெண்களை திருமணம் செய்தவர் 6வதாக பெண்ணை திருமணம் செய்ய முன்றபோது போலீசில் பிடிபட்ட சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.