யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று 4 கொரோனா மரணங்கள்: 50 வயதிற்குட்பட்டவர்கள் 2 பேர்!

Date:

நேற்று வரையான 24 மணித்தியாலத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் 4 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

அராலியை சேர்ந்த ஒருவரும், யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 3 பேருமே உயிரிழந்துள்ளனர்.

அராலியை சேர்ந்தவர் 49 வயதான ஆண்.

குருநகர் 2ஆம் குறுக்குத் தெருவை சேர்ந்த 45 வயதான பெண்ணொருவர், இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதிானது.

குருநகரை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் ஏற்கனவே யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்றார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைில் கொரோனா தொற்று உறுதியானது. அவர் கோப்பாய் சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதையடுத்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மீளவும் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.

இதுதவிர, யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பருத்திததுறை வீதியிலும் ஒரு கொரோன மரணம் பதிவானது.

 

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் காயமடைந்த மேலும் 2 சிறை உத்தியோகத்தர்கள் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை...

பெற்றோரை அடித்துக்கொன்ற மகன்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் போதைக்கு அடிமையான மகன், நேற்று முன்தினம் (13) இரவு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் வாக்குமூலம் பதிவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுதாரியான முகமது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்