மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் லீக் ஆனதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிம்பு மற்றும் யுவன் காம்போ என்பதால் ‘மாநாடு’ படத்தின் பாடல்களுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மாநாடு படத்திலிருந்து முதல் பாடலாக மஹ்ருசைலா ‘Meherezylaa’ என்ற பாடல் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்திருந்தனர். ஆனால் அதற்குள் அந்தப் பாடல் இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாநாடு படத்தின் ஆடியோ உரிமையை யுவன் சங்கர் ராஜாவின் யூ1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எனவே யுவனின் U1 Records யூடியூப் சேனலில் இந்தப் பாடல் வெளியாவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னரே சிலர் அதை இணையத்தில் லீக் செய்துள்ளனர்.
மஹ்ருசைலா ‘Meherezylaa’ பாடல் வெளியீட்டை முன்னிட்டு இன்று மாநாடு படக்குழுவினர் ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாட இருப்பதாக அறிவித்துள்ளனர். அதில் யுவன், சிம்பு, வெங்கட் பிரபு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, மதன் கார்க்கி, சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு நடைபெற இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.